Advertisement


79 பந்தில் 147 ரன்: ஸ்டாய்னிஸ் சாதனை

ஜனவரி 12, 2020 21:43
 Comments  
 


Marcus Stoinis, big bash cricket record
 

மெல்போர்ன்: பிக் பாஷ் ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் 79 பந்தில் 147 ரன்கள் விளாசினார் ஸ்டாய்னிஸ். 

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் ‘டுவென்டி–20’ லீக் தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணிக்கு ஹில்டன் (59) அரை சதம் விளாசினார். எதிரணி பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிதறடித்தார். பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்ட இவர் 60 பந்தில் சதம் எட்டினார். 

79 பந்தில் 147* ரன்கள் (13 பவுண்டரி, 8 சிக்சர்) விளாச, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு கேப்டன் ஹென்ரிக்ஸ் (41) மட்டும் கைகொடுக்க 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டும் எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

அதிக ரன்

சிறப்பாக செயல்பட்ட ஸ்டாய்னிஸ் பிக் பாஷ் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (147*) குவித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஷார்ட் (எதிர்–பிரிஸ்பேன் ஹீட், 2018) 122 ரன்கள் எடுத்ததே அதிகம். 

13

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில், ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட 13வது சிறந்த ரன்னாக அமைந்தது. முதலிடத்தில் பெங்களூரு அணிக்காக 175* ரன்கள் விளாசிய விண்டீஸ் வீரர் கெய்ல் உள்ளார். 

டில்லி வாழ்த்து 

சமீபத்திய ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடரின் ஏலத்தில் ஸ்டாய்னிஸ் டில்லி அணி சார்பில் ரூ. 4.80 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரது சாதனைக்கு டில்லி அணி ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?