Advertisement


ரஞ்சி: புஜாரா இரட்டை சதம்

ஜனவரி 12, 2020 21:25
 Comments  
 


Ranji Trophy, Cricket, Cheteshwar Pujara, Saurashtra, Double Century, Karnataka
 

ராஜ்கோட்: கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் 248 ரன்கள் விளாசிய சவுராஷ்டிரா அணியின் புஜாரா, முதல் தர போட்டியில் தனது 13வது இரட்டை சதமடித்தார்.

ராஜ்கோட்டில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  ‘பி’ பிரிவு போட்டியில் சவுராஷ்டிரா, கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் புஜாரா (248), ஷெல்டன் ஜாக்சன் (161) கைகொடுக்க சவுராஷ்டிரா அணி 7 விக்கெட்டுக்கு 581 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் கர்நாடகா அணி ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்திருந்தது.

இது, முதல் தர போட்டியில் புஜாராவின் 13வது இரட்டை சதம். இதன்மூலம் முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் விஜய் மெர்சன்ட் (11 இரட்டை சதம்) உள்ளார். ரஞ்சி கோப்பையில் அதிக முறை இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியலில் அஜய் சர்மாவுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 7 இரட்டை சதமடித்தனர். முதலிடத்தில் ஹிமாச்சல பிரதேச அணியின் பராஸ் தோக்ரா (9 இரட்டை சதம்) உள்ளார்.

தவிர ரஞ்சி கோப்பையில் புஜாரா, 6000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?