Advertisement


ஆக்லாந்து ஓபன்: செரினா சாம்பியன்

ஜனவரி 12, 2020 16:35
 Comments  
 


WTA Auckland Open Tennis, Serena Williams, USA, Champion
 

ஆக்லாந்து: ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நியூசிலாந்தில், ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெசிகா பெகுலா மோதினர். அபாரமாக ஆடிய செரினா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இதன்மூலம் இவர், டபிள்யு.டி.ஏ., அரங்கில் மூன்று ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2017ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார். அதன்பின் 5 தொடர்களில் (2018ல் விம்பிள்டன், யு.எஸ்., ஓபன், 2019ல் விம்பிள்டன், கனடா ஓபன், யு.எஸ்., ஓபன்) பைனல் வரை சென்று கோப்பை வெல்ல தவறினார்.

ரூ. 30 லட்சம் பரிசு: பைனலில் வெற்றி பெற்ற செரினாவுக்கு கோப்பையுடன் ரூ. 30.52 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இப்பரிசு தொகையை ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்கு அளித்தார். தவிர இவர், இத்தொடரின் முதல் சுற்றில் பயன்படுத்திய உடையில் ‘ஆட்டோகிராப்’ போட்டு வழங்கினார். இதனை ஏலத்தில் விற்று, கிடைக்கும் பணத்தை ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.

இரட்டையரில் ஏமாற்றம்: இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஜோடி 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆசியா முஹம்மது, டெய்லர் டவுன்சென்ட் ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?