Advertisement


ஆஸி., ஓபன்: பியான்கா விலகல்

ஜனவரி 11, 2020 21:36
 Comments  
 


Bianca Andreescu, australia open tennis
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக கனடா வீராங்கனை பியான்கா விலகினார்.

கனடா இளம் டென்னிஸ் வீராங்கனை பியான்கா 19. கடந்த யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரின்போது முழங்கால் காயத்தில் சிக்கினார். இதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். முழு உடல்தகுதி பெறாத காரணத்தால், இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து (ஜன. 20–பிப். 2, மெல்போர்ன்) விலகினார்.

பியான்கா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வருகிறேன். முழுமையான உடல்தகுதி பெறவில்லை. மருத்துவரின் அறிவுரைப்படி, ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகுகிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

ஜுயன் விலகல்

அர்ஜென்டினா வீரர் ஜுயன் மார்டின் டெல் போட்ரோவும், ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகினார். கடந்த ஜூனில் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்பில் விளையாடியபோது, இவரது வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக ‘ஆப்பரேஷன்’ செய்தபோதும் இன்னும் உடல்தகுதி பெறவில்லை. ஏற்கனவே, பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஜப்பானின் நிஷிகோரி இத்தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?