Advertisement


இணையுமா கோல்கட்டா–மோகன் பகான்

ஜனவரி 11, 2020 21:19
 Comments  
 


Mohun Bagan, merge with ATK, play in ISL next season
 

 கோல்கட்டா: கோல்கட்டா ஐ.எஸ்.எல்., அணியுடன், மோகன் பகான் அணி இணையும் எனத் தெரிகிறது. 

கோல்கட்டாவின் பிரபல கால்பந்து அணி மோகன் பகான். கடந்த 1889ல் உருவானது. 130 ஆண்டு பாரம்பரியம் ஆன இந்த அணி, ‘ஐ–லீக்’ தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆனது. சமீபத்திய ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் வருகை, பிரபலத்தை அடுத்து, ‘ஐ–லீக்’ தொடரின் தகுதி குறைக்கப்பட்டது. 

ஐ.எஸ்.எல்., கால்பந்து இந்தியாவின் முன்னணி தொடராக அறிவிக்கப்பட்டது. தவிர இத்தொடரில் கோல்கட்டா அணி (ஏ.டி.கே.,) இரண்டு முறை சாம்பியன் ஆனது. இதனால் வரும் 2020–21 சீசனில் ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் வகையில் மோகன் பகான் அணி, கோல்கட்டா அணியுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இரு அணி நிர்வாகிகளும் பேசி வரும் நிலையில் வரும் வாரத்தின் கடைசியில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல்கட்டா அணி சக உரிமையாளர் உத்சவ் பரேக் கூறுகையில்,‘‘ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் இப்படி செய்திகள் வெளியாகின்றன. முன்பு ஈஸ்ட் பெங்கால் என்றனர், தற்போது மோகன் பகான் இணையப் போகிறது என்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்,’’ என்றார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?