Advertisement


புத்தாண்டு ‘ஸ்பெஷல்’

ஜனவரி 05, 2020 17:13
 Comments  
 


Vinesh Phogat, wrestling, india, new year
 

‘‘இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளேன். இந்த புத்தாண்டு எனக்கு ‘ஸ்பெஷலாக’ இருக்கும் என நம்புகிறேன்,’’ என வினேஷ் போகத் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 25. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் முழங்கால் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். கடந்த ஆண்டு மார்ச் முதல் 53 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்கிறார். 

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் கைப்பற்றிய இவர், டோக்கியோ ஒலிம்பிக் (வரும் ஜூலை 24–ஆக. 9) போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த நட்சத்திரம் ஆனார்.

இவர் கூறியது: புதிய எடைப்பிரிவில் பங்கேற்பது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. நீண்ட காலமாக அடைய நினைத்த உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை பெற இப்பிரிவு உதவியது. மீண்டும் பதக்கத்தை அடைய இது கைகொடுக்கலாம். எனது பயிற்சி முறை, உணவு முறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.

மொத்த்தில் கடந்த ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளைத் தந்தது மட்டுமல்ல, பல பாடங்களையும் கற்றுத்தந்தது. புத்தாண்டில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளேன். இது எனக்கு ‘ஸ்பெஷலாக’ இருக்கும் என நம்புகிறேன். 

இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?