Advertisement


சந்திரனில் விழுந்த பந்து கிடைக்குமா

டிசம்பர் 03, 2019 22:45
 Comments  
 


nasa, kolhi, ab de villiers, ipl cricket team
 
பெங்களூரு: ‘‘எங்கள் அணியின் கோஹ்லி, டிவிலியர்ஸ் அடித்த பந்து நிலாவில் இருக்கிறதா என பார்க்க முடியுமா,’’ என, நாசாவிடம் பெங்களூரு ஐ.பி.எல்., அணி ‘ஜாலியாக’ கேட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தால் கடந்த ஜூலை 22ல் சந்திராயன்–2 விண்கலம் செலுத்தப்பட்டது. இதன் விக்ரம் ‘லேண்டர்’ பகுதி தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டதால் சந்திரனில் விழுந்த இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, விக்ரம் ‘லேண்டரின்’ பாகங்களை முதன்முதலில் கண்டுபிடித்ததாக இந்திய பொறியியலாளர் சண்முக சுப்பிரமணியனுக்கு, அமெரிக்க விண்வெளி நிறுவனம் (நாசா) பெருமை  சேர்த்து உள்ளது. 

இது குறித்து பெங்களூரு ஐ.பி.எல்., அணி நிர்வாகம் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ விக்ரம் ‘லேண்டர்’ விழுந்த இடத்தை கண்டுபிடித்ததற்கு பாராட்டு. எங்கள் அணி சார்பில் ‘நாசாவிடம்’ கோரிக்கை வைக்கிறோம். எங்கள் அணியின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் அடித்து பறக்கவிட்ட பந்துகள் சந்திரனில் உள்ளதா என கண்டுபிடிக்க முடியுமா,’ என, கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை விளாசல் வீரர்களான கோஹ்லி, டிவிலியர்ஸ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?