Advertisement


வில்லியம்சன், டெய்லர் சதம்: ஹாமில்டன் டெஸ்ட் ‘டிரா’

டிசம்பர் 03, 2019 22:43
 Comments  
 


Williamson hails hard work to save Test, seal England series win
 

ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், டெய்லர் சதம் அடிக்க, போட்டி ‘டிரா’ ஆனது.

நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 375, இங்கிலாந்து 476 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் (37), ராஸ் டெய்லர் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

மோசமான பீல்டிங்

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்திலும் வில்லியம்சன், ராஸ் டெய்லர் பொறுப்புடன் விளையாடினர். எதிரணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. கேப்டன் வில்லியம்சன் தந்த மூன்று ‘கேட்ச்’ வாய்ப்பையும் வீணடித்தனர். இதை பயன்படுத்திய இவர், டெஸ்ட் அரங்கில் 21வது சதம் அடித்தார். டெய்லர் 19வது சதம் கடந்தார். 41 ஓவர் மட்டுமே வீசிய நிலையில், மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் முன்னரே முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. வில்லியம்சன் (104), டெய்லர் (105) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1–0 என கைப்பற்றி கோப்பை வென்றது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?