Advertisement


ஐ.பி.எல்.,: ஸ்டார்க், ரூட் விலகல்

டிசம்பர் 03, 2019 22:38
 Comments  
 


Starc opts out of IPL 2020, Maxwell, Lynn in auction pool
 

மும்பை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் ரூட் விலகி உள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின், 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட அணிகள் சார்பில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. முடிவில், 971 வீரர்களின் பெயர்கள் வரும் 19ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள ஏலத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 29, தொடரிலிருந்து விலகி உள்ளார்.

இதற்குப்பதில், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள ‘தி ஹன்டர்டு’ (தலா 100 பந்து கொண்ட போட்டி) தொடரில் விளையாட உள்ளார். 2018ல் கோல்கட்டா சார்பில் ரூ. 9.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், காயம் காரணமாக விலகினார். உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்துவதற்காக கடந்த சீசனிலும் பங்கேற்கவில்லை. இதைப்போல, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டும், ஐ.பி.எல்., தொடரிலிருந்து விலகி உள்ளார்.

மற்றபடி, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கிறிஸ் லின், கம்மின்ஸ், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் உள்ளிட்டோர் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?