Advertisement


ரஜினியிடம் பும்ரா பயிற்சி

டிசம்பர் 03, 2019 22:38
 Comments  
 


Jasprit Bumrah begins training at MCA under Delhi Capitals trainer Rajnikanth Sivagnanam
 

மும்பை: காயத்தில் இருந்து மீண்ட பும்ரா பயிற்சியை துவக்கினார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 25. டெஸ்டில் 12 போட்டியில் 62 விக்கெட் சாய்த்தார். ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய பவுலர்களில் இரண்டாவதாக உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். கடந்த செப்., மாதம் இவரது கீழ் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

சொந்தமண்ணில் நடந்த தென் ஆப்ரிக்கா, வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை. வரும் விண்டீஸ் தொடரிலும் சேர்க்கப்படவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், அடுத்த ஆண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பெறுவார் என நம்பப்படுகிறது.

நேற்று, டில்லி ஐ.பி.எல்., அணியின் உடற்பயிற்சி நிபுணர் ரஜினிகாந்த் சிவஞானத்தின் மேற்பார்வையில், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டார் பும்ரா. இதற்கு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து டில்லி அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., போட்டிகள் இல்லாத சமயத்தில் மற்ற வீரர்களுக்கு ‘டிரெய்னராக’ சிவஞானம் பணியாற்றலாம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?