Advertisement


ஆறாவது விருது வென்றார் மெஸ்சி

டிசம்பர் 03, 2019 22:36
 Comments  
 


Messi wins sixth Ballon d Or as Rapinoe takes womens prize
 

பாரிஸ்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஆறாவது முறையாக ‘பாலன் டி ஆர்’ விருதை வென்றார்.

பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ (தங்க பந்து) விருது தரப்படுகிறது. உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் ஓட்டு அளித்து சிறந்த வீரரை தேர்வு செய்வர். இந்த ஆண்டுக்கான ‘டாப்–10’ பட்டியலில் மெஸ்சி (அர்ஜென்டினா), விர்ஜில் வென் (நெதர்லாந்து), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), முகமது சலா (எகிப்து) உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அர்ஜென்டினாவின் மெஸ்சி 686 புள்ளிகள் பெற்று ‘பாலன் டி ஆர்’ விருதை தனதாக்கினார். 32வது வயதில் 6வது முறையாக (2009, 10, 11, 12, 15, 19) வென்றார். அதிக முறை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (5) முந்தி முதலிடம் பிடித்தார்.

அதிக ‘ஹாட்ரிக்’

கடந்த கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதியில், மெஸ்சியின் அர்ஜென்டினா, பிரேசிலிடம் வீழ்ந்தது. இருப்பினும், இந்த ஆண்டில் தேசிய மற்றும் கிளப் (பார்சிலோனா) அணிக்காக சேர்த்து 54 போட்டிகளில் 46 கோல் அடித்துள்ளார். லா லிகா தொடரின் கடந்த சீசனில் அதிக கோல் (36) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மெஸ்சி, பார்சிலோனாவுக்கு கோப்பை வென்று காட்டினார். இதில் அதிக ‘ஹாட்ரிக்’ (34) அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோவுடன் (யுவன்டஸ் அணி) பகிர்ந்து கொண்டார்.

ரொனால்டோ ஏமாற்றம்

இரண்டாவது இடத்தை நெதர்லாந்தின் விர்ஜில் (679) பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (476) மூன்றாவது இடமே கிடைத்தது.

சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் மேகன் ரெபினய் தேர்வானார். இவர் பிரான்சில் நடந்த பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை தொடரில், அதிக கோல் (6) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார். இவர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

மனம் பறக்கிறது

விருது வழங்கும் நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்ற மெஸ்சி கூறுகையில், ‘‘முதல் முறையாக ‘பாலன் டி ஆர்’ விருது வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2009ல் எனது சகோதரர்களுடன் வந்திருந்தேன். தற்போது, ஆறாவது முறையாக வெல்வது மனது பறப்பதை போல உணர்கிறேன். எனது வயது 32 ஆகிவிட்டதால், ஓய்வு தருணத்தை நெருங்கி வருகிறேன். இருப்பினும், இன்னும் சில ஆண்டுகள் கால்பந்து விளையாடுவேன் என நம்புகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?