Advertisement


‘தெற்காசியா’: இந்தியா தங்க மழை!

டிசம்பர் 03, 2019 16:20
 Comments [1]  
 


south asia games, india beat pakistan, volleyball final, got gold, ARCHANA
 

திருப்புரேஷ்வர்: தெற்காசிய விளையாட்டுவாலிபால் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியது.

நேபாளத்தில்13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. திருப்புரேஷ்வரில் வாலிபால் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. முதல் செட்டை பாகிஸ்தான் அணி 25–20 என கைப்பற்றியது. பின் எழுச்சி பெற்ற இந்திய அணி இரண்டாவது செட்டை 25–15 என தனதாக்கியது. மூன்றாவது செட்டிலும் 25–17 என வென்றது இந்தியா. நான்காவது செட்டை இந்தியா 29–27 என கைப்பற்றியது. முடிவில் இந்திய அணி 3–1 (20–25, 25–15, 25–17, 29–27) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.

பெண்கள் சூப்பர்

பெண்கள் பிரிவு பைனலில் இந்தியா, நேபாளம் மோதின. முதல் இரு செட்டை இரு அணிகளும் 25–17, 23–25 என மாறி மாறி கைப்பற்றின. 3, 4வது செட்டையும் நேபாளம் (25–21), இந்தியா (25–20) வென்றன. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது செட்டில் இந்தியா 15–6 எளிதாக சாதித்தது. முடிவில் 3–2 என்ற செட்கணக்கில் வென்ற இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

 

கால்பந்தில் கலக்கல்

தெற்காசிய பெண்கள் கால்பந்தில் இந்திய அணி நேற்று 5–0 என்ற கணக்கில் மாலத்தீவு அணியை வென்றது. இந்தியாவின் பாலா தேவி 2, கிரேஸ், மணிஷா, ஜபமணி தலா 1 கோல் அடித்தனர்.


அஜய் அபாரம்

நேற்று நடந்த 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார், 3 நிமிடம், 54.18 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். சக வீரர் அஜித் குமார் (3 நிமிடம், 57.18 வினாடி) இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். பெண்கள் ஓட்டத்தில் இந்தியாவின் சாந்தா (4 நிமிடம், 35.51 வினாடி), சித்ரா (4 நிமிடம், 35.46 வினாடி) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

 

தமிழகத்தின் அர்ச்சனா அசத்தல்

உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ, 1.73 மீ., தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். சக வீராங்கனை ருபினாவுக்கு (1.69 மீ.,) வெண்கலம் கிடைத்தது. ஆண்கள் பிரிவில் சர்வேஷ் (2.21 மீ.,), சேத்தன் (2.16 மீ.,) தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.

* 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தமிழக வீராங்கனை அர்ச்சனா (11.80 வினாடி) தங்கம் வென்றார். நேபாளத்தில் நடக்கும் தெற்காசிய விளையாட்டில் அதிவேக வீராங்கனை என்ற பெருமை பெற்றார். நேற்று தடகளத்தில் மட்டும் 4 தங்கம், 4 வெள்ளி உட்பட 10 பதக்கம் வென்றது இந்தியா.

 

மெகுலி சாதனை

தெற்காசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர்ரைபிள் பிரிவு பைனலில் இந்தியாவின் 19 வயது வீராங்கனை மெகுலி கோஷ், 253.3 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இந்தியாவின் ஸ்ரீயன்கா (250.8) வெள்ளி, ஸ்ரேயா (227.2) வெண்கலம் பெற்றனர்.

* ஆண்கள் 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசனில்’ இந்தியாவின் செயின் சிங் (1179 புள்ளி) தங்கம், அகில் ஷெரோன் வெள்ளி வென்றனர்.

 

15

இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 44 பதக்கங்களுடன் (23 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Udhay one week ago | Report abuse
இரண்டாவது இடத்தில இருப்பது பெருமையா ? அதுவும் தெற்காசிய அளவில்.... என்னமோப்பா ...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?