Advertisement


பெடரருக்கு ‘காயின்’ கவுரவம்

டிசம்பர் 02, 2019 22:21
 Comments  
 


Roger Federer becomes first living Swiss citizen to have coin minted in his honour
 

‘பெர்ன்: சீனியர்’ டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த ‘காயின்’ வெளியிட உள்ளது சுவிட்சர்லாந்து அரசு. வாழும் போது இப்பெருமை பெற்ற முதல் சுவிட்சர்லாந்து குடிமகன் ஆகிறார் பெடரர்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 38. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 கோப்பை வென்றனர். சுவிட்சர்லாந்தின் சிறந்த டென்னிஸ் வீரர், தேசிய ‘ஹீரோ’ இவர் தான். இவரை கவுரவிக்கும் வகையில் பெடரர் உருவம் பொறித்த 20 ‘சுவிஸ் பிராங்க்’ மதிப்புள்ள (இந்திய மதிப்பு ரூ. 1430) வெள்ளியால் ஆன காயின் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2020, ஜன., மாதம் 55,000 காயின்கள் வெளியாக உள்ளன. இதற்காக முன்பதிவு செய்ய வரும் 19ம் தேதி கடைசி நாள் என சுவிட்சர்லாந்தில் கரன்சி மற்றும் காயின் தயாரிக்கும் சுவிஸ்மின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு இருக்கும் வரவேற்பை பொருத்து, வரும் 2020, மே மாதம் 50 ‘சுவிஸ் பிராங்க்’ (ரூ. 3,573) மதிப்புள்ள தங்கத்தால் ஆன 44,000 காயின்கள் வெவ்வேறு ‘டிசைன்களில்’ வெளியிட உள்ளனர். சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிமகன் ஒருவருக்கு ‘காயின்’ வெளியிட உள்ளது இது தான் முதன் முறை. 

பெடரர் தனது ‘டுவிட்டர்’ செய்தியில்,‘வியக்கத்தக்க அளவில் பெருமையும், மரியாதையும் தந்துள்ள சுவிட்சர்லாந்து மற்றும் சுவிஸ்மின்ட் நிறுவனத்துக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளார்.  

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?