Advertisement


ஜாம்ஷெட்பூர்–வடகிழக்கு யுனைடெட் ‘டிரா’

டிசம்பர் 02, 2019 21:40
 Comments  
 


Indian Super League Soccer, ISL Football, Jamshedpur, North East United, Draw
 

ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ காஸ்டல் முதல் கோலடித்தார். இதற்கு வடகிழக்கு யுனைடெட் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1–0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 90வது நிமிடத்தில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு பனாகியோடிஸ் டிரியாடிஸ் ஒரு கோலடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என, ‘டிரா’வில் முடிந்தது.

ஜாம்ஷெட்பூர் அணி 6 போட்டியில், 3 வெற்றி, 2 ‘டிரா’, ஒரு தோல்வி என, 11 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. வடகிழக்கு யுனைடெட் அணி 6 போட்டியில், 2 வெற்றி, 4 ‘டிரா’ என, 10 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் கோல்கட்டா அணி (11 புள்ளி) உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?