Advertisement


ஜோ ரூட் இரட்டை சதம்: இங்கிலாந்து அணி ரன் குவிப்பு

டிசம்பர் 02, 2019 16:18
 Comments  
 


New Zealand, England, Hamilton Test Cricket, Joe Root, Double Century
 

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமடித்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 476 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 375 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (114), போப் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரூட் அபாரம்: நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் போப் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் 3வது முறையாக இரட்டை சதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்த போது நீல் வாக்னர் பந்தில் போப் (75) அவுட்டானார். அபாரமாக ஆடிய ரூட் (226), சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கினார். வாக்னர் ‘வேகத்தில்’ கிறிஸ் வோக்ஸ் (0), ஜோப்ரா ஆர்ச்சர் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) வெளியேறினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 476 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. சாம் கர்ரான் (11) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் வாக்னர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

லதாம் ஏமாற்றம்: பின், 101 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு ஜீத் ராவல் (0), டாம் லதாம் (18) ஏமாற்றினர். நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 96 ரன் எடுத்திருந்தது. கேப்டன் வில்லியம்சன் (37), ராஸ் டெய்லர் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?