Advertisement


ஒரு ரன்னில் தகர்ந்த தமிழகம்: கடைசி பந்தில் நழுவிய கோப்பை

டிசம்பர் 01, 2019 23:11
 Comments  
 


Syed Mushtaq Ali Trophy, T20 Cricket, Final, Tamil Nadu, Karnataka
 

சூரத்: சையது முஷ்தாக் அலி பைனலில் தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு ஒரு ரன்னில் தகர்ந்தது. கடைசி பந்தில் வென்ற கர்நாடகா அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

குஜராத் மாநிலம் சூரத்தில், சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடருக்கான பைனல் நடந்தது. இதில் கர்நாடகா, தமிழகம் அணிகள் மோதின. தமிழக அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கர்நாடகாவின் அபிமன்யு மிதுன், முதுகுவலி காரணமாக விலகினார். இவருக்கு பதிலாக ஜெகதீஷா சுசித் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பாண்டே அரைசதம்: கர்நாடகா அணிக்கு லோகேஷ் ராகுல் (22), தேவ்தத் (32) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மயங்க் அகர்வால் (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கேப்டன் மணிஷ் பாண்டே, அரைசதம் கடந்தார். ரோஹன் கதம் (35) ஓரளவு கைகொடுத்தார். கருண் நாயர் (17) ஆறுதல் தந்தார்.

கர்நாடகா அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (60) அவுட்டாகாமல் இருந்தார்.

சங்கர் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (14), ஷாருக்கான் (16) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் (20), வாஷிங்டன் சுந்தர் (24) சோபிக்கவில்லை. பாபா அபராஜித் (40) நம்பிக்கை தந்தார்.

கடைசி ஓவரில் தமிழக அணி வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கிருஷ்ணப்பா கவுதம் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அஷ்வின், 4வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் (44) ‘ரன்–அவுட்’ ஆனார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

தமிழக அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. அஷ்வின் (16) அவுட்டாகாமல் இருந்தார்.

2

தமிழக அணியை வீழ்த்திய கர்நாடகா அணி, சையது முஷ்தாக் அலி டிராபி தொடரில், தொடர்ச்சியாக 2வது (2018–19, 2019–20) பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை பரோடா (2011–12, 2013–14), குஜராத் (2012–13, 2014–15) அணிகளுடன் பகிர்ந்து கொண்டது. தமிழக அணி ஒரு முறை (2006–07) கோப்பை வென்றுள்ளது.

* சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபி பைனலில் தமிழகத்தை வீழ்த்திய கர்நாடகா அணி, இந்த சீசனில் தனது 2வது கோப்பையை கைப்பற்றியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?