ஹாமில்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில், பர்ன்ஸ், கேப்டன் ரூட் ஜோடி அசத்தியது. பர்ன்ஸ் (101) சதம் கடந்தார். கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் 17வது டெஸ்ட் சதம் அடித்தார். ஸ்டோக்ஸ் (26), கிராவ்லே (1) ஏமாற்றினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து, 106 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரூட் (114), போப் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.