Advertisement


டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி

நவம்பர் 30, 2019 15:59
 Comments  
 


Davis Cup Tennis, India, Pakistan, Leander Paes, Jeevan Nedunchezhiyan, Sumit Nagal
 

நுார்–சுல்தான்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4–0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

கஜகஸ்தானில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் ‘ஆசியா/ஓசியானியா குரூப்–1’ போட்டி நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் வெற்றி பெற இந்திய அணி 2–0 என, முன்னிலையில் இருந்தது.

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் முகமது சோயிப், ஹுசைபா அப்துல் ரஹ்மான் ஜோடியை சந்தித்தது. மொத்தம் 52 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

பயஸ் முதலிடம்: இது, டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் பயசின் 44வது வெற்றி (57 போட்டி). தவிர இவர், டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இத்தாலியின் நிகோலா பீட்ராங்கெலி (42 வெற்றி, 66 போட்டி) உள்ளார். இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடியதன்மூலம், டேவிஸ் கோப்பையில் அறிமுகமான 75வது இந்திய வீரரானார் ஜீவன் நெடுஞ்செழியன்.

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை உறுதி செய்த இந்திய அணி, அடுத்த ஆண்டு (மார்ச் 6–7) குரோஷியாவில் நடக்கவுள்ள ‘வேர்ல்டு குரூப்’ தகுதிச் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற்றது. தவிர, டேவிஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டியிலும் (1962, 1963, 1964, 1970, 1973, 2006, 2019) இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடர்கிறது.

நாகல் அபாரம்: அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தானின் யூசப் கலீலை தோற்கடித்தார். ஏற்கனவே இந்தியாவின் வெற்றி உறுதியானதால் ராம்குமார் ராமநாதன் (இந்தியா), ஹுசைபா அப்துல் ரஹ்மான் (பாகிஸ்தான்) மோத இருந்த 2வது போட்டி நடத்தப்படவில்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?