Advertisement


டேவிஸ் கோப்பை: இந்தியா அபாரம்

நவம்பர் 29, 2019 17:08
 Comments  
 


Davis Cup Tennis, India, Pakistan, Ramkumar Ramanathan, Sumit Nagal
 

நுார்–சுல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் வெற்றி பெற்றனர்.

கஜகஸ்தானில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் ‘ஆசியா/ஓசியானியா குரூப்–1’ போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தானின் முகமது சோயிப் மோதினர். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் 6–0, 6–0 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றார்.

முதல் வெற்றி: இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் ஹுசைபா அப்துல் ரஹ்மான் மோதினர். ஒரு மணி நேரம், 4 நிமிடம் வரை சென்ற போட்டியில் சுமித் நாகல் 6–0, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, டேவிஸ் கோப்பை அரங்கில் சுமித் நாகல் பெற்ற முதல் வெற்றி. இதற்கு முன் ஸ்பெயின் (2016), சீனா (2018) அணிகளுக்கு எதிரான ஒற்றையர் பிரிவு போட்டியில் தோல்வி அடைந்திருந்தார்.

இதனையடுத்து இந்திய அணி 2–0 என, முன்னிலை பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?