Advertisement


டேவிஸ் கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல்

நவம்பர் 28, 2019 22:15
 Comments  
 


Davis Cup Tennis, India, Pakistan
 

நுார்–சுல்தான்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ‘ஆசியா/ஓசியானியா குரூப்–1’ போட்டி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் (செப். 14–15) நடக்க இருந்தது. ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து போட்டியை கஜகஸ்தானில் நடத்த (நவ. 29–30) சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) முடிவு செய்தது.

இந்தியா சார்பில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்ற ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல், ஜீவன் நெடுஞ்செழியன், லியாண்டர் பயஸ், சாகேத் மைனேனி பங்கேற்கின்றனர். இதில் ஜீவன் நெடுஞ்செழியன், டேவிஸ் கோப்பையில் அறிமுகமாகும் 75வது இந்திய வீரர் என்ற பெருமை பெற உள்ளார்.

அனுபவம் இல்லை: பாகிஸ்தான் அணியில் ஐசம்–உல்–ஹக் குரேஷி, அகீல் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் விளையாட மறுத்ததால், போதிய அனுபவமில்லாத இளம் வீரர்களான முகமது சோயிப், ஹுசைபா அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐ.டி.எப்., போட்டியில் கூட சாதித்ததில்லை.

இன்று இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் ராம்குமார், முகமது சோயிப் மோதுகின்றனர். இரண்டாவது போட்டியில் சுமித் நாகல், ஹுசைபா அப்துல் ரஹ்மான் விளையாடுகின்றனர்.

நாளை நடக்கவுள்ள இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் முகமது சோயிப், ஹுசைபா அப்துல் ரஹ்மான் ஜோடியை எதிர்கொள்கிறது. மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ராம்குமார்–ஹுசைபா அப்துல் ரஹ்மான் மற்றும் சுமித் நாகல்–முகமது சோயிப் மோதுகின்றனர்.

இதில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் குரோஷியாவில் நடக்கவுள்ள ‘வேர்ல்டு குரூப்’ தகுதிச் சுற்றில் குரோஷியாவுடன் மோதலாம்.

ஆறு முறை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 6 முறை (1962, 1963, 1964, 1970, 1973, 2006) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக 2006ல் மும்பையில் நடந்த ‘ஆசியா/ஓசியானியா குரூப்–1’ முதல் சுற்று போட்டியில் இந்திய அணி 3–2 என, பாகிஸ்தானை தோற்கடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?