Advertisement


மீண்டும் வருகிறார் சானியா

நவம்பர் 28, 2019 22:01
 Comments  
 


Sania set for return at Hobart tennis International
 

மும்பை: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்குகிறார் சானியா மிர்சா.

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா 33. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தலா மூன்று என ஆறு கோப்பை வென்றுள்ளார். இரட்டையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்த இவர், கடைசியாக 2017, சீன ஓபன் தொடரில் விளையாடினார். பின் ஆண் குழந்தை பிறந்ததால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது, இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் விளையாட உள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஹோபர்ட் சர்வதேச தொடரில் களமிறங்குகிறார்.

சானியா கூறுகையில்,‘‘ குழந்தை பிறந்த பின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. மீண்டும் உடற்தகுதி பெற்றுவந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து மீண்டு தற்போது போட்டிகளில் பங்கேற்க தயாராகி விட்டேன். ஹோபர்ட் சர்வதேச தொடரில் களமிறங்க உள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் பெருமை தான்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?