Advertisement


மீண்டும் வெல்லுமா சென்னை

நவம்பர் 27, 2019 22:42
 Comments  
 


chennai, odisha, isl soccer
 

சென்னை: சென்னை, ஒடிசா அணிகள் மோதும் ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி இன்று நடக்கிறது. சென்னை அணியின் வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. இன்று சென்னையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரை ஒருவழியாக, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த நிம்மதியில் உள்ளது. ஐதராபாத்திற்கு எதிரான கடந்த போட்டியில் ஆன்ட்ரே, வால்ஸ்கிஸ் கடைசி நேரத்தில் கோல் அடித்து அசத்தினர். அன்னிய வீரர்களான இவர்களுக்கு தோய் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்களின் பங்களிப்பும் முக்கியம். கடந்த போட்டியில் பங்கேற்காத, தன்பால் கணேஷ் களமிறக்கப்படுவது சந்தேகம்தான். இந்திய கோல்கீப்பர் விஷால் துடிப்பாக செயல்படுகிறார். இதுவரை 5 போட்டிகளில் 13 கோல் வாய்ப்பை தடுத்துள்ளார். இன்றும் இவரது அரணை தகர்ப்பது எதிரணிக்கு சவாலாக அமையும். சென்னை அணிக்கு சொந்த மண் என்பது சாதகமான விஷயம்.

சான்டனா நெருக்கடி

ஒடிசா அணி கடந்த இரண்டு போட்டிகளையும் ‘டிரா’ செய்தது. நடப்பு தொடரில், அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில், ஒடிசா வீரர் சான்டனா (3 கோல்) மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருடன் ஹெர்னாண்டஸ் சேர்ந்தால் சற்று சோதனைதான். ஓமன் அணிக்கு எதிரான ‘பிபா’ உலக கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்ற வினித் ராய் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?