புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
கஜகஸ்தானில், வரும் 29–30ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ‘ஆசிய/ஓசியானியா குரூப்–1’ போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் சசிகுமார் முகுந்த் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் போர்ச்சுகலில் நடந்த தொடரில் விளையாடிய போது இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விலக நேரிட்டது.
சசிகுமாருக்கு பதிலாக ஸ்ரீராம் பாலாஜியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தில் ‘விசா’ கிடைப்பது சிரமம் என்பதால் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இதனால் லியாண்டர் பயசுடன், சாகேத் மைனேனி அல்லது ஜீவன் நெடுஞ்செழியன் இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடுவர்.
ஏற்கனவே ரோகன் போபண்ணா, தோள்பட்டை காயத்தால் விலகினார்.