Advertisement


கோஹ்லி 5000

நவம்பர் 22, 2019 21:59
 Comments  
 


Virat Kohli becomes fastest to 5000 Test runs as captain
 

கோஹ்லி 32 ரன் எடுத்த போது டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் (19 சதம்) எடுத்த முதல் கேப்டன் ஆனார். இவர் 86 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். சராசரி 63.29 ரன்கள். 

* இந்த இலக்கை எட்டிய முதல் ஆசிய கேப்டன் ஆனார். 

* பாண்டிங் (97 இன்னிங்ஸ், ஆஸி.,), கிளைவ் லாயிடு (106, விண்டீஸ்), கிரீம் ஸ்மித் (110, தெ.ஆப்.,), ஆலன் பார்டர் (116, ஆஸி.,), பிளமிங்கிற்கு (130, நியூசி.,) அடுத்து இவ்வளவு ரன்கள் எடுத்த ஆறாவது கேப்டன் ஆனார் கோஹ்லி. 

* ஏற்கனவே கோஹ்லி அதிவேகமாக (65 இன்னிங்ஸ்) 4000 ரன்களை எடுத்த கேப்டன் ஆகியுள்ளார்.

15,000

இந்திய வீரர் புஜாரா, நேற்று 12 ரன் எடுத்த போது முதல் தர கிரிக்கெட்டில் (டெஸ்ட், ரஞ்சி உள்ளிட்ட போட்டிகள்) 15,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் இதுவரை 194 போட்டியில் 15,033 ரன்கள் எடுத்துள்ளார்.

50,000

கோல்கட்டா, பகலிரவு டெஸ்ட் போட்டிக்குரிய நான்கு நாள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. முதல் நாளான நேற்று மைதானத்தில் சுமார் 50,000 ரசிகர்கள் திரண்டனர்.

4

இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில், ஒரு இன்னிங்சில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிகழ்வு, நேற்று நான்காவது முறையாக நடந்தது. இஷாந்த் 5, உமேஷ் 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதற்கு முன் இங்கிலாந்து (1981/82, மும்பை), விண்டீஸ் (1983/84, ஆமதாபாத்), இலங்கை (2017/18, கோல்கட்டா) அணிகளுக்கு எதிரான டெஸ்டில் இதுபோல ‘வேகங்கள்’ அசத்தினர்.

10

கோல்கட்டா டெஸ்டில் அசத்திய இஷாந்த் சர்மா, 10வது முறையாக (96 டெஸ்ட்) 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய மண்ணில் 2007க்குப் பின் (பாக்.,, பெங்களூரு) இப்போது தான் இதுபோல விக்கெட் சாய்த்தார்.

30.3

இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில் குறைந்த ஓவர்களுக்கு சுருண்ட எதிரணி ஆனது வங்கதேசம். நேற்று 30.3 ஓவரில் 106 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதற்கு முன் 1986/87, பெங்களூரு டெஸ்டில் பாகிஸ்தான் 49.1 ஓவருக்கு சுருண்டது.

100

நேற்று ஷாத்மனை ‘கேட்ச்’ செய்த சகா, டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார். இதுவரை 36 டெஸ்டில் 101 விக்கெட் (90 ‘கேட்ச்’, 11 ‘ஸ்டம்பிங்’) வீழ்ச்சிக்கு கைகொடுத்தார். இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய விக்கெட் கீப்பர் ஆனார்.

* தோனி (90 டெஸ்ட், 294 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவி), சையது ஹிர்மானி (88ல் 198), கிரண் மோர் (49ல் 130), நயன் மோங்கியா (44ல் 107) முதல் நான்கு இடத்தில் உள்ளனர். 

அஷ்வின் எங்கே

இந்தியாவின் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் என மூன்று ‘வேகங்கள்’ மட்டும் பந்து வீசி மிரட்டினர். இதனால் ‘சுழலுக்கு’ வேலை இல்லாமல் போனது. ஜடேஜா மட்டும் ஒரு ஓவர் வீசினார். அஷ்வின் கடைசி வரை ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. 

கார் பவனி

நேற்று மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், ஸ்ரீகாந்த், குண்டப்பா விஸ்வநாத், சச்சின், டிராவிட், கும்ளே மற்றும் பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் கார்களில், மைதானத்தை வலம் வந்தனர்.

‘பறக்காத’ பந்து 

முதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கும் இரு அணி கேப்டன்களுக்கு ‘பிங்க்’ பந்தை, ராணுவத்தினர் மைதானத்தின் மேல் பறந்து வந்து வழங்குவர் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்நிகழ்ச்சியை பெங்கால் கிரிக்கெட் சங்கம் ரத்து செய்தது.

முதன் முதலில்... 

இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கிய பகலிரவு டெஸ்டில் வங்கதேச கேப்டன் மோமினுல் ‘டாஸ்’ வென்றார்.

* ‘பிங்க்’ பந்தில் முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். வங்கதேச அணியின் ஷாத்மன் எதிர்கொண்டார்.

* வங்கதேசத்தின் இம்ருல் கெய்ஸ் முதல் ரன் எடுத்தார். 

* முதல் பவுண்டரியை ஷாத்மன் அடித்தார். 

* ‘பிங்க்’ பந்தில் முதல் விக்கெட், முதன் முறையாக 5 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் இஷாந்த் சர்மா. இதற்கு முன் இந்தியா பங்கேற்ற முதல் பகலிரவு ஒருநாள் போட்டியில் சேட்டன் சர்மா, முதல் பகலிரவு ‘டுவென்டி–20’ போட்டியில் ஜாகிர் கான், முதல் விக்கெட் வீழ்த்தினர். 

* இந்தியாவுக்காக ‘பிங்க்’ மயங்க் அகர்வால் முதல் பவுண்டரி, ரோகித் முதல் சிக்சர் அடித்தனர்.

* ‘பிங்க்’ பந்தில் அவுட்டான முதல் இந்திய வீரர் ஆனார் மயங்க் அகர்வால்.

முதன் முறையாக...

இந்திய அணி 1932ல் டெஸ்ட் அரங்கில் சி.கே.நாயுடு தலைமையில் முதன் முறையாக கால் பதித்தது. இங்கிலாந்திடம் 158 ரன்னில் தோற்றது (லார்ட்ஸ்).

* 1974ல் பங்கற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா (கேப்டன் அஜித் வடேகர்), 4 விக்கெட்டில் இங்கிலாந்திடம் (லீட்ஸ்) வீழ்ந்தது. 

* 1984ல் இந்தியா தனது முதல் பகலிரவு ஒருநாள் போட்டியில் கவாஸ்கர் தலைமையில், ஆஸ்திரேலியாவிடம் 48 ரன்னில் தோற்றது (டில்லி). 

* 2006ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் ‘டுவென்டி–20’ல் இந்தியா பங்கேற்றது.  சேவக் தலைமையிலான அணி 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது (ஜோகனஸ்பர்க்). 

* முதன் முறையாக கோஹ்லி தலைமையில் பகலிரவு டெஸ்டில் (2019, எதிர்–வங்கதேசம், கோல்கட்டா) இந்தியா பங்கேற்கிறது. 

இருவருக்கு ‘அடி’

முகமது ஷமி வீசிய பவுன்சர் பந்து (21.3வது) வங்கதேசத்தின் லிட்டன் தாஸ், ‘ஹெல்மெட்’ முன்பகுதியில் பலமாக தாக்கியது. சற்று ‘ரிலாக்ஸ்’ ஆன பின் பேட்டிங்கை தொடர்ந்த இவர், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். 7 பந்துகளை சந்தித்த லிட்டன் தாஸ் (24), அம்பயரிடம் சென்று தலைசுற்றல் இருப்பதாக கூறி ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். 

* இவருக்குப் பதில் மாற்று வீரராக மெகிதி ஹசன் வந்து, 8 ரன்னுக்கு அவுட்டானார்.

* தொடர்ந்து ஷமி வீசிய மற்றொரு பந்து (22.1வது ஓவர்), நயீம் ‘ஹெல்மெட்டில்’ தாக்க, ஷமியை ‘ஹெல்மெட் கில்லர்’ என வர்ணனை செய்தனர். 

* ‘ஹெல்மெட்டில்’ அடி வாங்கிய லிட்டன் தாஸ், நயீம் இருவரும் தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியில் இருந்து விலகினர். இவர்களுக்குப் பின் மீதமுள்ள நாட்களில் லிட்டன் தாஸ், தய்ஜுல் இஸ்லாம் விளையாடுவர். 

* இருவரும், டெஸ்டில் அடிபட்ட வீரருக்கு மாற்றாக களமிறங்கிய 4, 5வது வீரர்கள் ஆகினர். 

சிவப்பு, வெள்ளை, ‘பிங்க்’...

இந்திய கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்தில் முதல் விக்கெட் வீழ்த்திய பவுலர் முகமது நிசார் (1932, லார்ட்ஸ் டெஸ்ட்). 

* வெள்ளை நிற பந்தில் கபில் தேவ் (1980, சிட்னி) முதல் விக்கெட் சாய்த்தார். 

* நேற்று ‘பிங்க்’ பந்தில் முதல் விக்கெட் வீழ்த்தினார் இஷாந்த். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?