Advertisement


‘பிங்க்’ பந்து: பின்னி எடுத்த இஷாந்த்: முதல் பகலிரவு டெஸ்டில் அசத்தல்

நவம்பர் 22, 2019 12:44
 Comments  
 


India vs bangladesh, day night test cricket, kolkata, UMESH
 
கோல்கட்டா: இந்திய மண்ணில் முதல் பகலிரவு டெஸ்ட் நேற்று கோல்கட்டாவில் துவங்கியது. இஷாந்த் உள்ளிட்ட இந்திய அணி ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது.

வெள்ளியால் ‘ஸ்பெஷலாக’ தயாரிக்கப்பட்ட ‘காயினை’ கோஹ்லி சுண்டி விட, ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மோமினுல் ஹக், பேட்டிங் தேர்வு செய்தார்.

இஷாந்த் அபாரம்

வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய ‘வேகங்கள்’ துவக்கத்திலேயே அசத்தினர். முதலில் இம்ருலை (4) வெளியேற்றினார் இஷாந்த் சர்மா.

போட்டியின் 11வது ஓவரில் மிரட்டிய இஷாந்த் ‘இரட்டை’ அடி கொடுத்தார். முதல் பந்தில் மோமினுல் (0), 3வது பந்தில் முகமது மிதுன் (0) அவுட்டாகினர். முஷ்பிகுர் ‘டக்’ அவுட்டானார். ஷாத்மன் (29), மகமதுல்லா (6) நீடிக்கவில்லை. லிட்டன் தாஸ் (24), ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். எபாதத் (1), மெகிதி ஹசன் (8), அபு ஜயேத் (0) விரைவில் வீழ்ந்தனர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் சாய்த்தார். உமேஷ் 3, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.

புஜாரா ஜோர்

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (14), ரோகித் (21) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. புஜாரா, கோஹ்லி இணைந்து சீராக ரன்கள் சேர்க்க, டெஸ்ட் அரங்கில் முதல் நாளிலேயே இந்திய அணி முன்னிலை பெற்றது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா,  55 ரன்னுக்கு அவுட்டானார். கோஹ்லி அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கோஹ்லி (59), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?