Advertisement


இந்திய அணி ஏமாற்றம் * உலக கோப்பை கால்பந்து கனவு தகர்ந்தது

நவம்பர் 19, 2019 23:08
 Comments  
 


India vs Oman Fifa football asia qualification
 

 மஸ்கட்: உலக கோப்பை கால்பந்து தகுதிப் போட்டியில் இந்திய அணி, ஓமனிடம் 0–1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022ல் கத்தாரில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கான இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி ‘இ’ பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது ஐந்தாவது போட்டியில் இந்திய அணி, வலிமையான ஓமனை அதன் சொந்தமண்ணில் சந்தித்தது.

போட்டியின் 6வது நிமிடத்தில் இந்திய வீரர் ராகுல், எதிரணி வீரரை ‘பவுல்’ செய்ய, ஓமனுக்கு ‘பெனால்டி’ தரப்பட்டது. எளிதான இந்த வாய்ப்பை அல் ஹாசினி, கோல் போஸ்ட் மேலாக அடித்து வீணாக்க, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 19வது நிமிடம் இந்திய வீரர் உடாண்டாவை ஓமன் வீரர்கள் கீழே தள்ளினர். இதில் இந்திய அணிக்கு ‘பிரீ கிக்’ கிடைத்தது. இதில் பந்தை சுனில் செத்ரிக்கு ‘பாஸ்’ செய்த போதும், ஓமன் கோல் கீப்பர் அலி அல் ஹபாசி எளிதாக தடுத்தார்.

25வது நிமிடத்தில் அபாயகரமான முறையில் பந்தை தடுத்த இந்திய வீரர் பிரனாய், ‘எல்லோ கார்டு’ பெற்றார். 33வது நிமிடம் அல் ஹால்டி கொடுத்த பந்தை பெற்ற அல் ஹாசினி அப்படியே கோலாக மாற்றினார். இந்திய அணி முதல் பாதியில் 0–1 என பின்தங்கியது.

கோல் இல்லை

இரண்டாவது பாதியில் பந்தை இந்திய வீரர்கள் அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதும், ஓமன் கோல் ஏரியாவை நெருங்குவதே சிரமமாக இருந்தது. 77வது நிமிடம் இந்திய அணிக்கு கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் சுனில் செத்ரி அடித்த பந்து வீணானது.

85, 87 வது நிமிடங்களில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்புகளும் வீணாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. முடிவில் இந்திய அணி 0–1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

இதுவரை மோதிய 5 போட்டியில் 3 ‘டிரா’, 2 தோல்வியுடன் 3 புள்ளி மட்டும் பெற்று, 4வது இடத்திலுள்ள இந்திய அணியின் 2022 உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?