Advertisement


இந்தியா–பாக்., மோதல் எங்கே

நவம்பர் 19, 2019 18:01
 Comments  
 


ITF rejects Pakistan appeal, nominates Nur Sultan as venue for Davis Cup tie, india
 

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடக்கவுள்ளது. 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசிய–ஓசியானா குரூப்–1 போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. கடந்த செப். 13–14ல் பாகிஸ்தானில் நடக்க இருந்த இத்தொடர், பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, வரும் நவ. 29–30ல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐ.டி.எப்.,) இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து அப்பீல் செய்தது. பாகிஸ்தான் அப்பீலை ஏற்க மறுத்த ஐ.டி.எப்., தற்போது போட்டி நடக்கும் இடத்தை அறிவித்தது. 

இதன் படி கஜகஸ்தானின் நுார் சுல்தான் நகரில் நடக்கவுள்ளது. இங்கு அதிகமான குளிர் நிலவுவதால் போட்டிகள் உள்ளரங்க மைதானத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக ஒற்றையர் போட்டிகளில் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் விளையாடுவர். இரட்டையர் போட்டியில் ‘சீனியர்’ லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் இரட்டையர் போட்டியில் இணைந்து களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?