Advertisement


கேரளா–ஒடிசா ‘டிரா’ * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

நவம்பர் 08, 2019 22:20
 Comments  
 


Messi Bouli injury scare gives Kerala Blasters fresh headache
 

கொச்சி: கேரளா, ஒடிசா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டி, கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. நேற்று கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கொச்சி, ஒடிசா அணிகள் மோதின.

போட்டியின் 23வது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு ‘பிரீ கிக்’ கிடைத்தது. இந்த பந்தை கோலாக மாற்ற முயன்று அந்தரத்தில் குதித்தார் ஒடிசா வீரர் சன்டனா. கேரளாவின் முன்கள வீரர் மெஸ்சி பவுலி, தலையால் முட்டி வெளியே தள்ள முயற்சித்தார். இருவரது தலையும் பலமாக மோத, கீழே சரிந்தனர்.

உடனடியாக மைதானத்துக்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரும் ‘ஸ்ட்ரெச்சரில்’ கொண்டு செல்லப்பட்டனர். 44வது நிமிடம் கேரள வீரர் ராகுல் அந்தரத்தில் பறந்து அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாக சென்றது. முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் போட்டி 0–0 என ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?