Advertisement


ஒலிம்பிக்: தகுதி பெற்றார் சின்கி

நவம்பர் 08, 2019 21:26
 Comments  
 


Chinki Yadav bags Indias 11th Olympic quota in shooting
 

தோகா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சின்கி யாதவ் தகுதி பெற்றார்.

கத்தார் தலைநகர் தோகாவில் 14வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் சின்கி யாதவ் பங்கேற்றார். துடிப்பாக செயல்பட்ட இவர் 588 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் சின்கி 116 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தார். இதன் மூலம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் (ஜூலை 24– ஆக. 9) நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவில் முன்னேறிய இரண்டாவது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே, ராகி சர்னோபட் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் சின்கி யாதவ், 21. இவரது தந்தை எலக்டிரிசியனாக உள்ளார். தேசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ள சின்கி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் கைப்பற்றி உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?