Advertisement


இந்திய அணியில் தீரஜ் சிங்

நவம்பர் 06, 2019 22:07
 Comments  
 


Goalkeeper Dheeraj gets maiden call up in Indian team for FIFA WC qualifiers
 

புதுடில்லி: இந்திய கால்பந்து அணியில் கோல்கீப்பர் தீரஜ் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது.

கத்தாரில் 2022ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய அணிகளுக்கு தகுதிச்சுற்றுப்போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. இதன் இரண்டாவது சுற்று ‘டி’ பிரிவில் இந்திய அணி கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துடன் இடம்பெற்றுள்ளது. ஓமனிடம் வீழ்ந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளை (எதிர்– கத்தார், வங்கதேசம்) ‘டிரா’ செய்தது. ஆப்கானிஸ்தான் (நவ. 14, டுசான்பே, தஜிகிஸ்தான்), ஓமன் (நவ.19, மஸ்கட்) அணிகளை எதிர்கொள்கிறது. இதற்கான 26 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோல்கீப்பர் கமல்ஜித் சிங் நீக்கப்பட்டு, இளம் கோல்கீப்பர் தீரஜ் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சுனில் செத்ரி, அனிருத் தபா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்: சுனில் செத்ரி, குர்பிரீத் சிங் சாந்து, அம்ரிந்தர், தீரஜ் சிங், பிரீதம், நிஷூ குமார், ராகுல் பிகே, அனாஸ், நரேந்தர், அடில் கான், சர்தாக், சுபாஷ் போஸ், மந்தர் ராய், உடான்டா சிங், ஜாக்கிசந்த், செய்மின்லென், ராய்னியர், வினீத் ராய், சாகல் அப்துல், பிரனாய், அனிருத் தபா, லாலியன்சுலா, பிரண்டன் பெர்னாண்டஸ், ஆஷிக், பரூக் சவுத்ரி, மன்வீர் சிங்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?