Advertisement


வடகிழக்கு அணி வெற்றி

நவம்பர் 06, 2019 21:54
 Comments  
 


Indian Soccer league, isl, north east united, hyderabad
 

 ஐதராபாத்: ஐ.எஸ்.எல்., தொடரின் லீக் போட்டியில் வடகிழக்கு அணி, 1–0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. 

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை, பெங்களூரு உட்பட 10 அணிகள் மோதுகின்றன. நேற்று தனது சொந்தமண்ணில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது. 

முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கிய முதல் நிமிடத்தில் (46வது, வடகிழக்கு வீரர் அடித்த பந்தை ஐதராபாத் கோல் கீப்பர் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 

79வது நிமிடம் ரெடீம் தலையால் அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாகச் சென்றது. 84வது நிமிடத்தில் ஜோஸ் லியுடோ அடித்த பந்து, ஐதராபாத் வீரர் ஷங்கர் வலது கையில் பட, வடகிழக்கு அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. 

இதை பரைய்ரோ கோலாக மாற்றினார். முடிவில் வடகிழக்கு அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?