Advertisement


ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி

நவம்பர் 06, 2019 19:49
 Comments  
 


Asian Football Championship Qualification, U19 Soccer, India, Uzbekistan
 

ஹோபர்: ஆசிய கால்பந்து (19 வயது) தகுதிச் சுற்றில் இந்திய அணி 0–2 என, உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்தது.

உஸ்பெகிஸ்தானில், ஆண்களுக்கான (19 வயது) ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு (அக். 14–31) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் 46 அணிகள், 11 பிரிவுகளாக விளையாடுகின்றன. சவுதி அரேபியாவில் நடக்கும் ‘எப்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி, தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை சந்தித்தது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உஸ்பெகிஸ்தான் அணிக்கு கோஷிமோவ் (53வது நிமிடம்), முஜாபர் (65வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0–2 என, தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி, சவுதி அரேபியாவை (நவ. 8) எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?