Advertisement


கால்பந்து மைதானத்தில் பாராசூட்

அக்டோபர் 22, 2019 22:47
 Comments  
 


Inter Milan clash delayed as parachuter lands in middle of pitch
 

சாசுவாலோ: இத்தாலியில் கால்பந்து போட்டி நடந்த போது, பாராசூட் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியில் ‘சீரியே ஏ’ கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் இன்டர் மிலன், சாசுவாலோ அணிகள் மோதிய போட்டி நடந்தது. முதல் பாதியின் கடைசி நேரத்தில் இன்டர் மிலன் அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடிக்க தயாரானார் ரொமெலு லுகாகு. அப்போது திடீரென வானத்தில் இருந்து ஒருவர் பாராசூட்டில் மைதானத்தின் மையப்பகுதியில் உள்ள வட்டத்தில் தரையிறங்கினார்.

தலையில் காமிராவுடன் கூடிய ‘ஹெல்மெட்’ அணிந்து இருந்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் புகுந்த பாதுகாப்பு படையினர், பாராசூட் நபரை பிடித்துக் கொண்டு வெளியே சென்றனர். இவர் யார், எதற்காக மைதானத்தில் களமிறங்கினார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?