Advertisement


தமிழக வீரர் ஆனந்தன் தங்கம்:உலக ராணுவ விளையாட்டில் அபாரம்

அக்டோபர் 22, 2019 15:27
 Comments [4]  
 


Anandan Gunasekaran bags India first gold at the Military World Games
 

 உகான்: உலக ராணுவ விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன் தங்கம் வென்றார்.

சீனாவில் உலக ராணுவத்திற்கான போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் 140 நாடுகளில் இருந்து 9,308 ராணுவத்தினர் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்தன், முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தற்போது முதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தவிர, உலக ராணுவ விளையாட்டில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது. 

பாதிப்பு எப்படி

கடந்த 2005ல் ராணுவத்தில் இணைந்தார் ஆனந்தன். 2008ல் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி, இடது முழங்காலுக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டது. 

தென் ஆப்ரிக்காவின் மாற்றுத்திறனாளி வீரர் பிஸ்டோரியசை பார்த்து துாண்டப்பட்ட இவர், அவரைப் போல தடகளத்தில் கால்பதித்தார். 2012ல் மரக்காலுடன் 100, 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். 2016, ஆசிய–ஓசியானா சாம்பியன்ஷிப்பில் 400 மீ.,ல் தங்கம், 200 மீ., வெள்ளி வென்ற இவர், 2017 பாரா தடகள கிராண்ட்பிரிக்சில் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். 2018ல் ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி (400 மீ.,), வெண்கலம் (200 மீ.,) கைப்பற்றினார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
prakash c 3 weeks ago | Report abuse
குட் லக் பிரதர்


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
T.Manikandan 3 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் ஆனந்தன். உங்களைப்பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்,


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
USMAN ALI 3 weeks ago | Report abuse
வாழ்துக்கள் ஆனந்தன் உங்கள் வாழ்கை மேலும் நல்ல முறையில் அமைய கடவுளை வேண்டுகிறேன்


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Vijay 3 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் ஆனந்த். மேலும் பல பரிசுகள் வாங்க வேண்டும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?