Advertisement


ஆனந்த் ஏமாற்றம்

அக்டோபர் 22, 2019 13:51
 Comments  
 


grand prix chess, india anand
 

 டக்ளஸ்: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் 26வது இடம் பிடித்து ஏமாற்றினார். விதித் சந்தோஷ் குஜ்ராத்தி அதிகபட்சம் 12வது இடம் பெற்றார். 

அயர்லாந்து கடல் பகுதியில் அமைந்துள்ள மாண் தீவில், கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடந்தது. இதன் 11வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ராப்சன் ராயை சந்தித்தார். 

இப்போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 30வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, சசிகிரண் வெற்றி பெற்றனர். சேதுராமன், குகேஷ், சூர்ய சேகர் கங்குலி மோதிய போட்டிகள் ‘டிரா’ ஆகின. 

முடிவில் 7.0 புள்ளிகள் பெற்ற விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அதிகபட்சம் 12வது இடம் பிடித்தார். ஆனந்த் (6.5), 26வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?