Advertisement


கால்பந்து: பெங்களூரு–வடகிழக்கு ‘டிரா’

அக்டோபர் 21, 2019 21:55
 Comments  
 


ISL Football, Bengaluru, Northeast United, Soccer
 

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் ரபெல் அகஸ்டோ, ஆஷிக் குருனியான், மைக்கேல் அன்வு அறிமுகமாகினர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி கோலடிக்க முயற்சித்த பந்து ‘கோல் போஸ்ட்டை’ விட்டு விலகிச் சென்றது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 52வது நிமிடத்தில் வடகிழக்கு யுனைடெட் அணியின் அசமோவா கியான் துாக்கி அடித்த பந்து ‘கோல் போஸ்ட்டில்’ பட்டு திரும்பியது. பின், 64வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் பெங்களூரு அணியின் நிஷு குமார் ‘கோல் போஸ்ட்டை’ நோக்கி அடித்த பந்தை வடகிழக்கு யுனைடெட் கோல்கீப்பர் சுபாஷிஷ் ராய் சவுத்தரி சாமர்த்தியமாக தடுத்தார்.

தொடர்ந்து போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 0–0 என, ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?