Advertisement


சர்பராஸ் மனைவி கோபம்

அக்டோபர் 21, 2019 21:52
 Comments  
 


Sarfaraz Ahmed, Cricket, Wife Khusbhat Sarfaraz, Pakistan Cricker
 

கராச்சி: ‘‘தோனிக்கு என்ன வயது தெரியுமா, அவர் என்ன ஓய்வு பெற்று விட்டாரா, என் கணவரிடம் மட்டும் இப்படி கேட்கிறீர்களே,’’ என சர்பராஸ் மனைவி குஷ்பாத் கோபமாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு 2017ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தவர் கேப்டன் சர்பராஸ் அகமது 32. சமீபத்தில் இவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. தவிர வரும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலும் இவர் சேர்க்கப்படவில்லை. இதனால் சர்பராஸ் ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து சர்பராஸ் மனைவி குஷ்பாத் கூறுகையில்,‘‘அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும், 32 வயது தானே ஆகிறது. இந்திய வீரர் தோனிக்கு என்ன வயது தெரியுமா, அவர் என்ன ஓய்வு பெற்று விட்டாரா, எனது கணவர் வலிமையான முறையில் மீண்டு வருவார். ஏனெனில் அவர் போராடும் குணம் கொண்டவர். அணியில் இருந்து நீக்குவது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு. இதனால் ஏமாற்றம் அடையவில்லை, இப்படி நடக்கும் என மூன்று நாட்களுக்கு முன்பே தெரியும். இனிமேல் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடுவார்,’’ என்றார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?