Advertisement


விஜய் ஹசாரே: அரையிறுதியில் தமிழகம்

அக்டோபர் 21, 2019 18:57
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Tamil Nadu, Chhattisgarh, Semi Final
 

ஆலுார்: விஜய் ஹசாரே டிராபி அரையிறுதிக்கு தமிழகம், சட்டீஸ்கர் அணிகள் முன்னேறின.

கர்நாடகா மாநிலம் ஆலுாரில் நடந்த விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான காலிறுதியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் மோதின. மழை மற்றும் மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக தலா 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் (17), முரளி விஜய் (22) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. விஜய் சங்கர் (13), கேப்டன் தினேஷ் கார்த்திக் (11) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பாபா அபராஜித் (56) அரைசதம் கடந்தார். ஷாருக்கான் (9) ஏமாற்றினார்.

தமிழக அணி 39 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. வாஷிங்டன் சுந்தர் (35), முருகன் அஷ்வின் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

மழையால் தொல்லை: பின், 39 ஓவரில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா (6), அன்மோல்பிரீத் சிங் (9) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 12.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால், போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

இதனையடுத்து லீக் சுற்றில் பஞ்சாப் அணியை (5 வெற்றி, 8 போட்டி) விட கூடுதலாக வெற்றி பெற்ற தமிழக அணி (9 வெற்றி, 9 போட்டி) அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மும்பை ஏமாற்றம்

மற்றொரு காலிறுதியில் சட்டீஸ்கர், மும்பை அணிகள் மோதின. சட்டீஸ்கர் அணி 45.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின், 40 ஓவரில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி கைவிடப்பட்டது.

இதனையடுத்து லீக் சுற்றில் மும்பையை (4 வெற்றி, 8 போட்டி) விட கூடுதலாக வெற்றி பெற்ற சட்டீஸ்கர் அணி (5 வெற்றி, 8 போட்டி) அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பெங்களூருவில் நடக்கவுள்ள அரையிறுதியில் (அக். 22) கர்நாடகா – சட்டீஸ்கர் மற்றும் தமிழகம் – குஜராத் அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?