Advertisement


செஸ்: ஆனந்த் தோல்வி

அக்டோபர் 21, 2019 11:26
 Comments  
 


FIDE grand pric chess, india, anand
 

 டக்ளஸ்: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரின் 10வது சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் தோல்வியடைந்தார். 

அயர்லாந்து கடல் பகுதியில் அமைந்துள்ள மாண் தீவில், கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதன் 10வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சீனாவின் வாங் ஹாவோவை சந்தித்தார். ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் இருந்து ஏமாற்றிய ஆனந்த், 28வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரி கிருஷ்ணா, சக வீரர் அதிபனை வீழ்த்தினார். 

மற்ற இந்திய நட்சத்திரங்கள் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, சசிகிரண், சூர்ய சேகர் கங்குலி, ஹரிகா துரோணவள்ளி தங்களது போட்டிகளை ‘டிரா’ செய்தனர். 

பத்து சுற்றுகளின் முடிவில் 6.0 புள்ளிகள் மட்டும் பெற்ற ஆனந்த், 24 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (6.0) 28வது, ஹரி கிருஷ்ணா 6.0) 31வது இடத்தில் உள்ளனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?