Advertisement


பாதி மாரத்தான் எத்தியோப்பியா அபாரம்

அக்டோபர் 20, 2019 20:53
 Comments  
 


Belihu, Gemechu defend titles at Airtel Delhi Half Marathon
 

புதுடில்லி: டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் பெலிஹு, கெமெச்சு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

டில்லியில், 15வது பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஆண்கள் பிரிவில் அபாரமாக செயல்பட்ட எத்தியோப்பியாவின் பெலிஹு, பந்தய துாரத்தை 59.10 நிமிடத்தில் கடந்து முதலிடத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இவர், நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டார்.

பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவின் கெமெச்சு, இலக்கை ஒரு மணி நேரம் 6 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார். இதனையடுத்து, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய ஆண்கள் பிரிவில் ஸ்ரீனு புகதா (ஒரு மணி நேரம், 4 நிமிடம், 33 வினாடி), சுரேஷ் படேல் (1:04:57), ஹர்ஷாத் (1:05:12) முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இந்திய பெண்கள் பிரிவில் சூர்யா (ஒரு மணி நேரம், 12 நிமிடம், 49 வினாடி), பருல் சவுத்தரி (1:13:55), சிந்தா யாதவ் (1:15:28) ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?