Advertisement


விஜய் ஹசாரே: அரையிறுதியில் கர்நாடகா

அக்டோபர் 20, 2019 17:28
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Karnataka, Pondicherry, Delhi, Gujarat
 

பெங்களூரு: புதுச்சேரி அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்து கைகொடுக்க கர்நாடகா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கர்நாடகா, புதுச்சேரி அணிகள் மோதிய விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான காலிறுதி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

புதுச்சேரி அணிக்கு அருண் கார்த்திக் (0), வினய் குமார் (2), கேப்டன் தாமோதரன் ரோகித் (2), கார்த்திக் (11) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய திரிவேதி (54), விக்னேஷ்வரன் மாரிமுத்து (58) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தனர். பாபித் அகமது (38) ஓரளவு கைகொடுக்க, புதுச்சேரி அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு லோகேஷ் ராகுல் (90), தேவ்தத் (50) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய ரோகன் தன்பங்கிற்கு அரைசதமடிக்க, கர்நாடகா அணி 41 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. ரோகன் (50), கேப்டன் மணிஷ் பாண்டே (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

மற்றொரு காலிறுதியில் குஜராத் அணி (225/4, 37.5 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (223/10, 49 ஓவர்) வீழ்த்தியது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?