Advertisement


டில்லி–பெங்கால் அணிகள் மோதல்: புரோ கபடி பைனலில்...

அக்டோபர் 18, 2019 21:03
 Comments  
 


Pro Kabaddi League, Final, Delhi, Bengal
 

ஆமதாபாத்: புரோ கபடி லீக் தொடருக்கான பைனலில் இன்று டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்முறையாக கோப்பை வெல்லும் அணி புதிய சாம்பியனாக வலம் வரலாம்.

இந்தியாவில் நடக்கும் புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) தொடரின் 7வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இன்று நடக்கவுள்ள பைனலில் டில்லி அணி, பெங்கால் அணியை சந்திக்கிறது.

லீக் சுற்றில், 22 போட்டியில், 15 வெற்றி, 3 ‘டை’, 4 தோல்வி என, 85 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த டில்லி அணி, அரையிறுதியில் 44–38 என்ற கணக்கில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய பெங்களூரு அணியை வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

லீக் சுற்றில், 22 போட்டியில், 14 வெற்றி, 3 ‘டை’, 5 தோல்வி என, 83 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த பெங்கால் அணி, அரையிறுதியில் 37–35 என்ற கணக்கில் 2015ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த மும்பையை தோற்கடித்து முதன்முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.

இம்முறை இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டியில், பெங்கால் அணி ஒன்றில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ‘டை’ ஆனது. டில்லி அணி சார்பில் நவீன் குமார், அதிகபட்சமாக 285 புள்ளி பெற்றுள்ளார். பெங்கால் அணி சார்பில் மனிந்தர் சிங் 205 புள்ளி பெற்றுள்ளார்.

பரிசு எவ்வளவு: இரு அணிகளும் முதன்முறையாக பைனலில் விளையாடுவதால், வெற்றி பெறும் அணி புதிய சாம்பியன் அந்தஸ்தை பெறலாம். தவிர கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசு தொகை வெல்லலாம். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1.8 கோடி வழங்கப்படும்.

இதுவரை பாட்னா 3 (2016ல் 2 முறை, 2017), ஜெய்ப்பூர் (2014), மும்பை (2015), பெங்களூரு (2018) அணிகள் கோப்பை வென்றுள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?