Advertisement


ஜூனியர் ஹாக்கி: இந்தியா ‘டிரா’

அக்டோபர் 18, 2019 20:55
 Comments  
 


Sultan of Johor Cup, Junior Hockey, India, England
 

ஜோகர்: சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

மலேசியாவில், 9வது சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா என, 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு போட்டியில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற இந்திய அணி, பைனலுக்கான இடத்தை உறுதி செய்தது.

இந்நிலையில் 5வது லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்தியா சார்பில் ஷிலானந்த் லக்ரா (48வது நிமிடம்), மன்தீப் மோர் (51வது), ஷர்தா நந்த் திவாரி (57வது) தலா ஒரு கோலடித்தனர். இங்கிலாந்து அணிக்கு லோன் வால் (27வது நிமிடம்), ஆன்ட்ரூ மெக்கானல் (32வது), மாத்யூ ராவ்ஷா (59வது) கைகொடுத்தனர்.

லீக் சுற்றின் முடிவில், 5 போட்டியில், 3 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி என, தலா 10 புள்ளிகளுடன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை கைப்பற்றின. பைனலில் (அக். 19) இவ்விரு அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?