Advertisement


அரையிறுதியில் மேரி கோம்: உலக குத்துச்சண்டையில் ஆதிக்கம்

அக்டோபர் 10, 2019 11:49
 Comments  
 


Mary Kom assured of 8 th World Championships medal, beats Ingrit Valencia of Colombia
 

உலன்–உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 8வது பதக்கத்தை உறுதி செய்து சாதித்தார் இந்தியாவின் மேரி கோம். 

ரஷ்யாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 51 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் ‘சீனியர்’ மேரி கோம் களமிறங்கினார். காலிறுதியில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவை சந்தித்தார்.

இதில் அனைத்து சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம், 5–0 என வெற்றி பெற்றதாக ஒருமனதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப்பில் 51 கி.கி., பிரிவில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார். 

இனி ‘எட்டு’

உலக குத்துச்சண்டை அரங்கில் தனிப்பிறவியாக வலம்  வருகிறார் மேரி கோம். முதன் முறையாக களமிறங்கிய  தொடரில் (2001) வெள்ளி கைப்பற்றினார். பின் களமிறங்கிய 2002,  2005, 2006, 2008, 2010, 2018 என ஆறு தொடர்களிலும் தங்கம்  வென்றுள்ளார். 

தற்போது அரையிறுதிக்கு முன்னேறிய இவர் குறைந்தபட்சம்  வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதனால் ஆண்கள்,  பெண்கள் என ஒட்டுமொத்த உலக குத்துச்சண்டை  சாம்பியன்ஷிப் அரங்கில் 6 தங்கம், 1 வெள்ளி உட்பட மொத்தம்  8 பதக்கங்கள் வெல்லும் முதல் நட்சத்திரம் என புதிய சாதனை  படைத்துள்ளார். 

இதற்கு முன் கியூபா வீரர் பெலிக்ஸ் சேவன், 6 தங்கம், 1 வெள்ளி  என 7 பதக்கம் வென்றுள்ளார். அடுத்த இடத்தில் அயர்லாந்து  வீராங்கனை கேட்யே டெய்லர் 6 பதக்கம் (5 தங்கம், 1  வெண்கலம்) உள்ளார். 

ஜமுனா அபாரம்

48 கி.கி., பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மஞ்சு ராணி, 4–1 என கிம் யங்கை (வட கொரியா) வென்றார். 54 கி.கி., பிரிவில் இந்தியாவின் ஜமுனா 4–1 என ஜெர்மனியின் உர்ஸ்சுலாவை வீழ்த்தினார். 69 கி.கி., பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லவ்லினா 4–1 என, போலந்தின் கரோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். மூவரும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தனர்.

81 கி.கி., பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கவிதா, 1–4 என கவலேவாவிடம் (பல்கேரியா) வீழ்ந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?