Advertisement


கோஹ்லி ‘50’ * கேப்டனாக புதிய மைல்கல்

அக்டோபர் 10, 2019 10:07
 Comments  
 


Captain, test cricket 50, kohli, india
 

புனே: இந்திய அணி கேப்டனாக களமிறங்கிய தனது 50வது ‘டாஸ்’ வென்ற கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் துவங்கியது. இந்திய அணி கேப்டனாக தனது 50வது டெஸ்டில் களமிறங்கிய கோஹ்லி, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 

இரண்டாவது இடம்

இதையடுத்து இந்திய அணிக்காக அதிக டெஸ்டில் கேப்டனாக களமிறங்கியவர்களில் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி) முந்தி இரண்டாவது இடம் பிடித்தார் கோஹ்லி. இவர், முந்தைய 49 டெஸ்டில் 29ல் வெற்றி பெற்றார்.

முதலிடத்தில் முன்னாள் கேப்டன் தோனி (60 டெஸ்ட், 27 வெற்றி) உள்ளார். 4, 5 மற்றும் 6வது இடங்களில் கவாஸ்கர் (47ல் 9 வெற்றி), முகமது அசார் (47ல் 14), மன்சூர் அலிகான் பட்டோடி (40ல் 9) உள்ளனர். 

* உலக டெஸ்ட் அரங்கில் முதலில் களமிறங்கிய 49 டெஸ்டில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (36 வெற்றி), பாண்டிங்கிற்கு (34 வெற்றி) அடுத்து மூன்றாவது இடத்தில் கோஹ்லி (29 வெற்றி) உள்ளார். 

கேப்டன் கோஹ்லியின் வெற்றி விபரங்கள்:

கேப்டனாக சொந்த மண்ணில்...

டெஸ்ட் வெற்றி தோல்வி ‘டிரா’

        22              16                1             5

கேப்டனாக அன்னிய மண்ணில்...

அணி          டெஸ்ட் வெற்றி தோல்வி ‘டிரா’

இலங்கை            6       5        1     0

இங்கிலாந்து    5       1        4     0

ஆஸ்திரேலியா    6       2        2     2

விண்டீஸ்            6       4        0     2

தென் ஆப்ரிக்கா    3       1        2     0

வங்கதேசம்    1       0        0     1

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?