Advertisement


தெற்காசிய கால்பந்து: இந்தியா வெற்றி

அக்டோபர் 09, 2019 19:16
 Comments  
 


SAFF U15 Womens Soccer Championship, Football, India, Nepal
 

திம்பு: பெண்களுக்கான (15 வயது) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

பூடான் தலைநகர் திம்புவில், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 3வது சீசன் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம் என, 4 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் லீக் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்தியாவின் சுமதி குமாரி முதல் கோலடித்தார். பின், 38வது நிமிடத்தில் இந்தியாவின் லிண்டா கோம், ஒரு கோலடித்தார். இதற்கு நேபாளம் வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 2–0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய இந்திய வீராங்கனை லிண்டா கோம் (56வது நிமிடம்) 2வது கோலடித்து கைகொடுத்தார். இந்நிலையில் எழுச்சி கண்ட நேபாளம் அணிக்கு 62வது நிமிடத்தில் மேன் மாயா தமாய், ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு 67வது நிமிடத்தில் பிரியங்கா, தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார்.

கடைசி வரை போராடிய நேபாளம் அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் பூடானை அக். 11ல் எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?