Advertisement


காலிறுதியில் லவ்லினா: உலக குத்துச்சண்டையில் கலக்கல்

அக்டோபர் 09, 2019 16:41
 Comments  
 


Womens World Boxing Championships, Jamuna Boro, Lovlina Borgohain
 

உலன்–உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்தியாவின் லவ்லினா (69 கி.கி.,), ஜமுனா போரோ (54 கி.கி.,) முன்னேறினர்.

ரஷ்யாவில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 54 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் ஜமுனா போரோ, அல்ஜீரியாவின் ஒயிடாட் ஸ்போ மோதினர். இதில் அபாரமாக ஆடிய ஜமுனா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் ஜமுனா, ஜெர்மனியின் உர்சுலா காட்லோப் மோதுகின்றனர்.

பின், 69 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் லவ்லினா, மொராக்கோவின் ஒமாய்மா பெல் அக்பிப் மோதினர். கடந்த சீசனில் வெண்கலம் வென்ற லவ்லினா, 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதில் லவ்லினா, போலந்தின் கரோலினா கோஸ்வெஸ்கா மோதுகின்றனர்.

இதுவரை 5 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஏற்கனவே மேரி கோம் (51 கி.கி.,), மஞ்சு ராணி (48 கி.கி.,), கவிதா சகால் (+81 கி.கி.,) ஆகியோர் காலிறுதிக்குள் நுழைந்திருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?