Advertisement


தருண் அய்யாச்சாமி, ஹிமா தாஸ் வாய்ப்பு

செப்டம்பர் 10, 2019 22:51
 Comments  
 


Dharun Ayyasamy, hima das, world athletics championship 2019
 

 புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியில் ஹிமா தாஸ், தமிழகத்தின் தருண் அய்யாச்சாமி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். 

கத்தார் தலைநகர் தோகாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் வரும் 27ல் துவங்குகிறது. இதற்கான 25 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலை இந்திய அணி அறிவித்துள்ளது. இதற்கான, பெண்கள் 100 மீ., ஓட்டத்தில், டுட்டி சந்த் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இவர், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் கைப்பற்றினார். இதைப்போல, இத்தாலியில் நடந்த உலக பல்கலை விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். இதைப்போல, ஹிமா தாஸ் ‘ரிலே’ அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 2018ல் பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில், தங்கம் வென்றிருந்தார். 

அனாஸ் வாய்ப்பு

வீரர்கள் பிரிவில், ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), ஜின்சன் ஜான்சன் (1500 மீ.,) உள்ளிட்டோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். முகமது அனாஸ், தமிழகத்தின் தருண் அய்யாச்சாமி உள்ளிட்டோர் 4*400 மீ., ஓட்டத்திற்கான ‘ரிலே’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆசிய விளையாட்டில் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தருண் வெள்ளி வென்றிருந்தார். தமிழக வீரர் ஆரோக்ய ராஜிவ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதைப்போல, காயத்திலிருந்து மீண்டு வரும் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவும் இடம்பெறவில்லை. 

அணி விவரம்: ஜாபிர், ஜின்சன் ஜான்சன், அவினேஷ், இர்பான், தேவேந்தர் சிங், கோபி, ஸ்ரீசங்கர், தஜிந்தர் பால் சிங், ஷிவ்பால் சிங், முகமது அனாஸ், நிர்மல், அலெக்ஸ் அந்தோணி, அமோஜ் ஜாகப், ஜீவன், தருண் அய்யாச்சாமி, ஹர்ஷ் குமார்.

வீராங்கனைகள்: சித்ரா, அன்னு ராணி, ஹிமா தாஸ், டுட்டி சந்த், விஸ்வமய்யா, பூவம்மா, ஜிஸ்னா, ரேவதி, சுபா, வித்யா. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?