Advertisement


இந்திய ‘ஏ’ அணி முன்னிலை

செப்டம்பர் 10, 2019 22:46
 Comments  
 


Gill misses out on century, India A in drivers seat against South Africa A
 

திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணி முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் (4 நாள்) இந்திய ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் (66), அன்கித் பாவ்னே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

சக்சேனா அரை சதம்

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அன்கித் பாவ்னே (6) முந்தைய நாள் ரன்களுடன் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். நிகிடி ‘வேகத்தில்’ ஷிவம் துபே (8), ஷர்துல் தாகூர் (34) அவுட்டாகினர். சக்சேனா அரை சதம் கடந்தார். முடிவில், இந்திய ‘ஏ’ அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சக்சேனா (61) அவுட்டாகாமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு பீட்டர் (4), ஜோன்டோ (10) ஏமாற்றினர். ஹம்ஜா (44) அரை சத வாய்ப்பை தவறவிட்டார். நதீம் ‘சுழலில்’ முத்துசாமி (4) ஆட்டமிழந்தார். 

ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் மார்க்ரம் (4), முல்டர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?