Advertisement


இலங்கை அணி விலகல்: பாக்., அமைச்சர் புலம்பல்

செப்டம்பர் 10, 2019 22:44
 Comments  
 


Fawad Hussain claims Sri Lankan cricketers opted out of Pakistan tour after IPL exclusion threat from India
 

கொழும்பு: பாகிஸ்தான் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் விலகியதற்கு இந்தியாதான் காரணம், என அந்நாட்டு அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2009ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் ஜிம்பாப்வே (2015), விண்டீஸ் (2018) தவிர, மற்ற அணிகள் பாகிஸ்தான் செல்ல மறுத்தன. இதனால், பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் தனித்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில், அந்நாட்டு கிரிக்கெட் போர்டு இறங்கியது. இலங்கை அணியை சமாதானப்படுத்தி சொந்த மண்ணில் விளையாட அனுமதி பெற்றது. இதன்படி, இலங்கை அணி வரும் மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் (செப். 27–  அக்., 9 ) கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால், ஒரு நாள் அணி கேப்டன் கருணாரத்னே, ‘டுவென்டி–20’ அணி கேப்டன் மலிங்கா, மாத்யூஸ், சண்டிமால் உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்து தொடரிலிருந்து விலகினர். இந்நிலையில், இந்த விஷயத்தில் இந்தியாவை பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.

பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹொசைன் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையாளர்கள் சிலரிடம் பேசினேன். எங்கள் நாட்டில் நடக்கவுள்ள தொடரில், சில இலங்கை வீரர்கள் விலக இந்தியா பின்னணியில் உள்ளது எனத்தெரிகிறது. பாகிஸ்தான் சென்றால் ஐ.பி.எல்., தொடரிலிருந்து நீக்கப்படுவீரர்கள் என இவர்களை இந்தியா எச்சரித்துள்ளது. இது விளையாட்டு அரங்கில் மோசமான செயல்,’ என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?